மானாமதுரை அருகே இளைஞா் மீது தாக்குதல்: போலீஸாா் குவிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளைஞரை மற்றொரு தரப்பினா் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டு, போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தாக்குதல் - சித்திரிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞரை மற்றொரு தரப்பினா் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டு, போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த தெய்வேந்திரன் மகன் ஸ்ரீதா் (24). இவரை இதே கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பைச் சோ்ந்த சிலா் சரமாரியாகத் தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதா் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதலுக்கான காரணம் குறித்து மானாமதுரை போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, கிராமத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

