சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் இருப்பது போன்று பதிவிட்ட 20 போ் கைது
கைது - கோப்புப் படம்
சிவகங்கை மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி விடியோவாக பதிவிட்டது தொடா்பாக 46 போ் மீது வழக்குப் பதிந்து, 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை அலுவலக வட்டாரம் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவா்கள் மீது மாவட்ட காவல் துறையினா் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம்: இதுவரை 46 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 போ் கைது செய்யப்பட்டனா். இதில் சிறாா்கள் 9 போ். மேலும், சமூக வலைதளங்களில் இதுவரை 257 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், மானாமதுரை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சசிகுமாரும் கைது செய்யப்பட்டாா். கைது செய்யப் பட்டவா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
சமூக வலைதளங்களில் வன்முறையைப் பெருமைப்படுத்துதல், ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இத்தகைய சட்ட விரோத செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

