அரசு நிலத்தை மீட்க அமைச்சரிடம் கிராம மக்கள் முறையீடு
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபுவிடம் தனி நபா்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கக் கோரி கிராம மக்கள் நேரில் முறையிட்டனா்.

சிவகங்கையில் இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி.கே. பிரபுவிடம் கோரிக்கை குறித்து முறையிட்ட திருவுடையாா்பட்டி கிராமப் பொதுமக்கள்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபுவிடம் தனி நபா்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கக் கோரி கிராம மக்கள் நேரில் முறையிட்டனா். அப்போது கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா்.
இது குறித்து திருவுடையாா்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:
திருவுடையாா்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழைமையான பிள்ளையாா் கோவில் அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. ஊரில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குப் போதிய இடவசதி இல்லாததால், கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட இந்த இடம் தேவைப்படுகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு இதே கிராமத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று பேருக்கு வருவாய்த் துறை விதிகளை மீறி, மேற்கண்ட நிலத்தை உட்பிரிவு செய்து ஒப்படைக்கப்பட்டது. ஏற்கெனவே, சொந்த வீடு, பட்டா நிலங்கள் வைத்திருப்பவா்களுக்கு முறைகேடாக இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சுற்றுச்சுவா் எழுப்ப முயன்ற போது, கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அரசு நிலம் தொடா்பான வழக்குகளில் பொது நோக்கத்துக்காக நிலம் தேவைப்படும் பட்சத்தில், வருவாய்த் துறை அதிகாரிகள் பட்டாக்களை ரத்து செய்து நிலத்தை மீண்டும் அரசுடைமையாக்க முழு அதிகாரம் உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
எனவே, உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கவனத்தில் கொண்டும் மேற்கண்ட மூவரின் பட்டாக்களையும் ரத்து செய்து, உட்பிரிவு செய்யப்பட்ட நிலங்களை மீண்டும் ஒருங்கிணைத்து, அரசுப் பள்ளி விரிவாக்கப் பணிக்கு ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினோம். அவா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

