கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

என்ஜினில் மான் கொம்பு சிக்கி பழுது 2.30 மணிநேரம் தாமதமாக புறப்பட்ட ரயில்!

மானாமதுரை அருகே விரைவு ரயில் என்ஜினில் மான் கொம்பு சிக்கியதில் பிரேக் பழுது ஏற்பட்டதால் மாற்று என்ஜின் மூலம் 2.30 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ஓணம் பண்டிகை

சிறப்பு ரயில் - கோப்புப் படம்

Updated On :

மானாமதுரை அருகே விரைவு ரயில் என்ஜினில் மான் கொம்பு சிக்கியதில் பிரேக் பழுது ஏற்பட்டதால் மாற்று என்ஜின் மூலம் 2.30 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ராமேசுவரத்திலிருந்து தாம்பரத்துக்குச் சென்ற விரைவு ரயில் மானாமதுரையைக் கடந்து சென்றபோது மேலக்கொன்னக் குளம் ரயில் நிலையம் அருகே ரயிலின் குறுக்கே மான் ஓடியது.

அப்போது மானின் கொம்பு உடைந்து என்ஜின் பிரேக் பகுதியில் சிக்கிக் கொண்டதால் என்ஜின் பழுதாகி ரயில் அங்கேயே நின்றது. ஆனால் மான் உயிருடன் தப்பியது. இதையடுத்து, காரைக்குடியிலிருந்து மற்றொரு என்ஜின் கொண்டுவரப்பட்டு பழுதான என்ஜினுடன் இணைத்த பின்னா் 2.30 மணிநேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு ரயில் தாம்பரம் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.