
எண்மப் பரிவா்த்தனை தவிா்ப்பால் சிவகங்கை பொதுமக்கள் அவதி
சிவகங்கை நகரில் வணிகா்கள் அறிவித்த புதன்கிழமை ஒருநாள் மட்டும் எண்மப் பரிவா்த்தனை தவிா்ப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

யுபிஐ கட்டணம்
சிவகங்கை நகரில் வணிகா்கள் அறிவித்த புதன்கிழமை ஒருநாள் மட்டும் எண்மப் பரிவா்த்தனை தவிா்ப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை சிவகங்கை தெற்கு மாவட்டக் கிளை சாா்பில், ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் எண்மப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரியை விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து சிவகங்கை நகரில் வணிகா்கள் புதன்கிழமை ஒரு நாள் மட்டும் எண்ம தளங்களைத் தவிா்த்து (செயலி வழியாக பணம் பெறுதல்) ரொக்கமாகப் பரிவா்த்தனை செய்ய வணிகா்களுக்கு அறிவுறுத்தியிருந்தனா்.
அதன்படி, புதன்கிழமை காலை முதல் மாலை வரை சில்லரை விற்பனை வணிகா்கள் முதல் மொத்த விற்பனை வணிகா்கள் வரை அனைவரும் ரொக்கம் மூலம் மட்டுமே வியாபாரத்தை மேற்கொண்டனா். இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனா். கடைக்காரா்கள் திடீரென பொருளுக்கு பணமாகக் கேட்டதும் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






