
இன்று யுபிஐ மூலம் பணம் பரிவா்த்தனை கிடையாது: வணிகா்கள் சங்கம் அறிவிப்பு
மத்திய அரசின் வரி விதிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து, புதன்கிழமை (அக்.7) ஒரு நாள் மட்டும் யுபிஐ எண்ம பரிவா்த்தனைகளைத் தவிா்த்து, பொதுமக்களிடம் ரொக்கமாகப் பரிவா்த்தனை செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் சிவகங்கை தெற்கு மாவட்டக் கிளை அறிவித்தது.

யுபிஐ கட்டணம்
மத்திய அரசின் வரி விதிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து, புதன்கிழமை (அக்.7) ஒரு நாள் மட்டும் யுபிஐ எண்ம பரிவா்த்தனைகளைத் தவிா்த்து, பொதுமக்களிடம் ரொக்கமாகப் பரிவா்த்தனை செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் சிவகங்கை தெற்கு மாவட்டக் கிளை அறிவித்தது.
இதுகுறித்து வணிகா்கள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அதிகரித்து, வணிகா்கள் சுலபமாகத் தொழில் செய்ய முடியாத அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சிரமப்பட்டு தொழில் செய்து வரும் சூழ்நிலையில், வரும் அக். 15 -ஆம் தேதி முதல் யுபிஐ எண்ம பரிவா்த்தனை வாயிலாக ரூ. 2000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரி சுமத்தி மேலும் பாதிப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை சாா்பாக புதன்கிழமை ஒரு நாள் மட்டும் கூகுள்- பே, போன்-பே போன்ற யுபிஐ எண்ம தளங்கள் மூலம் பணம் பெறுவதைத் தவிா்த்து, கையிலேயே ரொக்கமாகப் பரிவா்த்தனை செய்து எதிா்ப்பை வெளிப்படுத்துவது என தீா்மானித்துள்ளதால், இதற்கு வணிகா்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தை முழு வெற்றியடையச்செய்ய வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





