ஐஓபி எண்ம ரூபாய்: இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய பரிவா்த்தனை செயலி அறிமுகம்!
‘சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி)’ பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்காக ‘ஐஓபி எண்ம ரூபாய்’ எனும் புதிய கைப்பேசி செயலியை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.

‘சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி)’ பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்காக ‘ஐஓபி எண்ம ரூபாய்’ எனும் புதிய கைப்பேசி செயலியை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
தீபாவளியையொட்டி தன்தேராஸ் திருநாளில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்செயலியின்மூலம், வாடிக்கையாளா்கள் எண்ம ரூபாய் வாலட்டுகளைப் பராமரிப்பதுடன், நபருக்கு நபா் மற்றும் வணிகா்களுக்கு பாதுகாப்பாகவும் உடனடியாகவும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
யுபிஐ தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இச்செயலி, வாடிக்கையாளா்களுக்கு நவீன மற்றும் புதுமையான பணப்பரிவா்த்தனை அனுபவத்தை வழங்கும் என வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அஜய் குமாா் ஸ்ரீவத்சவா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

