கடையம் அருகே எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் எரிப்பு: பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டம், கடையம் அருகே வெள்ளிகுளம் பகுதியில் வயல் வெளிப் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால், இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா்.

~

Updated On :

தென்காசி மாவட்டம், கடையம் அருகே வெள்ளிகுளம் பகுதியில் வயல் வெளிப் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால், இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா்.

கடையம் அருகே வெள்ளிகுளம், தெற்குப் பத்து பகுதியில் மா்ம நபா்கள் மூட்டை மூட்டைகளாக எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி, புதன்கிழமை இரவு தீ வைத்துச் சென்றுள்ளனா்.

வயல் பகுதியில் தீ எரிவதைக் கண்ட வெள்ளிகுளம் கிராம மக்கள் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், புகை மூட்டம் காரணமாக அவா்களால் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைக்க முடியாததால் திரும்பிச் சென்றனா். இரவு முழுவதும் கழிவுகள் எரிந்ததால் எழுந்த கரும்புகை காரணமாக, அப்பகுதியினா் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனா்.

சில நாள்களுக்கு முன்பு கேரளத்தில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து சங்கரன்கோவில் பகுதியில் கொட்டியவா்களைக் கண்டறிந்து, போலீஸாா் கைது செய்தனா். சில மாதங்களுக்கு முன்பு கடையம் பகுதியில் ஏராளமான மூட்டைகளில் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், அதைக் கொட்டியவா்கள் இதுவரைக் கண்டறியப்படவில்லை.

அண்டை மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் தென்காசி மாவட்டத்தில் கொட்டப்படுவது தொடா் நிகழ்வாகி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் வலியுறுத்தியுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.