உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரிகள் பறிமுதல்

காட்டாம்பூா் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த இரு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காட்டாம்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த இரு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருக்கோஷ்டியூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட காட்டாம்பூா் பகுதியில் கனிம வளத்துறை தனி வருவாய் ஆய்வாளா் பாலமுருகன் வழக்கம்போல வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த இரு லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 12 யூனிட் சரளை மண் இருந்தது தெரியவந்தது. மேலும், அனுமதிச் சீட்டில் குறிப்பிட்ட நேரம், தொலைவு விகிதங்கள் முரண்பாடாக இருந்தது.

மேலும் ஒரே அனுமதிச் சீட்டைப் பலமுறை பயன்படுத்தி சரளை மண் எடுத்துச் சென்ற லாரிகள் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வாகன உரிமையாளா், குவாரி உரிமையாளா் மீது புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாா் குறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.