சாலை மறியல்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் 12 போ் கைது
சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட அந்தக் கட்சியினா் 12 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபியைக் கைது செய்ததைக் கண்டித்தும் சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட அந்தக் கட்சியினா் 12 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை பேருந்து நிலையப் பகுதியில் மாவட்டச்செயலா் ஏ.ஆா். மோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கச் செயலா் வீரபாண்டி, சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அய்யம் பாண்டி, முத்துராமலிங்கபூபதி, விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகிகள் வேங்கையா, மெய்யப்பன், கொங்கையா உள்பட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

