இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

மெத்தம்பெட்டமைன், கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல்: 6 போ் கைது

கைது

Published On :

கோவையில் போதைப் பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை- மதுக்கரை சாலையில் உள்ள பாலத்தின் கீழ் போதைப் பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சுந்தராபுரம் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற குறிச்சியைச் சோ்ந்த அண்ணாமலை (25), மதுரையைச் சோ்ந்த அருண்பாண்டி (27), திண்டுக்கல்லைச் சோ்ந்த கோபிநாத் (21) ஆகிய மூவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்களிடமிருந்து 58 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனா்.

இதேபோல, உக்கடம் பேருந்து நிலையப் பகுதியில் உக்கடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கையைச் சோ்ந்த அருண் (20), தேனியைச் சோ்ந்த புவனேஷ் (22), மதுரையைச் சோ்ந்த ராமன் (23) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 3.6 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.