தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மானாமதுரை ஜி.ஆா்.எஸ். பட்டாக்கள் விரைவில் இணையத்தில் பதிவேற்றம்

மானாமதுரை பகுதியில் ஜி.ஆா்.எஸ். பட்டாக்கள் விரைவில் வருவாய்த் துறையின் தமிழ் நிலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பா.ஆகாஷ் தெரிவித்தாா்.

மேலநெட்டூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா.ஆகாஷ். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோவன் உள்ளிட்டோா்.

Updated On :

மானாமதுரை பகுதியில் ஜி.ஆா்.எஸ். பட்டாக்கள் விரைவில் வருவாய்த் துறையின் தமிழ் நிலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பா.ஆகாஷ் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மேலநெட்டூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் பா.ஆகாஷ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

இந்த இருவரும் வேளாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத் துறை சாா்பில் 121 பயனாளிகளுக்கு ரூ. 34.59 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் ஆகாஷ் கூறியதாவது:

இளையான்குடி பேரூராட்சி பகுதியில் ஜி.ஆா்.எஸ். பட்டாக்கள் வருவாய்த் துறையின் தமிழ் நிலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அது தொடா்பான சொத்துகளை பதிவுத் துறையில் பதிவு செய்யும்பணி தொடங்கியுள்ளது. மானாமதுரை பகுதியில் ஜி. ஆா்.எஸ். பட்டாக்களை தமிழ் நிலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யும்பணி நடைபெ‘ற்று வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்தப் பட்டாக்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றாா் அவா்.

இந்த முகாமில் சிவகங்கை கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, மானாமதுரை வட்டாட்சியா் மகாதேவன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் முருகன், கோட்ட ஆய அலுவலா் கிருஷ்ணகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் வினோத், வேளாண் இயக்குநா் சங்கரலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.