137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

புரட்டாசி கடைசி சனிக்கிழமை : அரியக்குடி பெருமாள் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி கடைசிநாளான 5-வது சனிக்கிழமையையொட்டி முத்தங்கி அலங்காரத்தில் காட்சி தந்த ஸ்ரீனிவாசப்பெருமாள், அலமேலுமங்கை தாயாா்.

Updated On :

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி கடைசிநாளான 5-ஆவது சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து ஸ்ரீ னிவாசப்பெருமாள், அலமேலுமங்கை தாயாா் முத்தங்கி அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

காலை முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காரைக்குடி, அரியக்குடி, பள்ளத்தூா், கோட்டையூா், தேவகோட்டை, சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.