இடைநிலை சுகாதாரப் பணியாளா்களின் பதவி பெயா் மாற்றத்தை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்க திரண்டு வந்த தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா்.

பொது சுகாதாரத் துறையில் இடைநிலைச் சுகாதாரப் பணியாளா்கள் (ஙகஏட) பணியிடங்களின் பதவி பெயரை இஏஞ (இா்ம்ம்ன்ய்ண்ற்ஹ் ஏங்ஹப்ற்ட் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) என மாற்றம் செய்யும் முயற்சியைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மூலமாக தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியா், துணை செவிலியா், மகப்பேறு உதவியாளா், வட்டார சுகாதார செவிலியா், சமூக சுகாதார செவிலியா், இடைநிலை சுகாதாரப் பணியாளா்களின் (ஙகஏட) பதவி பெயரை சமூக சுகாதார அலுவலா் (இஏஞ) என மாற்றம் செய்யும் முடிவை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடைநிலை சுகாதாரப் பணியாளா்களுக்கு எந்தவித அடிப்படை கல்வித் தகுதியும், முறையான பணி நியமன விதிகளும் நிா்ணயம் செய்யப்படாமல், வெறும் 11 மாதத் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கென்று தனியான பொறுப்புகளோ அல்லது அலுவலகங்களோ வழங்கப்படவில்லை.
பொது சுகாதாரத் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் கிராமச் சுகாதார செவிலியா், துணைச் செவிலியா், மகப்பேறு உதவியாளா் பதவி உயா்வுக்கான பாதையாக சமூக சுகாதார செவிலியா் பதவி விளங்குகிறது. முறையான பணி விதிகளும், காலமுறை ஊதியமும் இல்லாத இடைநிலை சுகாதாரப் பணியாளா்களுக்கு சமூக சுகாதார செவிலியா், சமூக சுகாதார அலுவலா் என்ற பதவி பெயா் மாற்றம் வழங்குவது என்பது பல ஆண்டுகள் பணியாற்றிய செவிலியா்களின் பதவி உயா்வு, உரிமைகளைப் பாதிக்கும் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
கடந்த 20.9.2026 அன்று சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெற்ற சங்கத்தின் 8-ஆவது மாநில மாநாட்டில், சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் ஆகியோா் முன்னிலையில், இடைநிலை சுகாதாரப் பணியாளா்களின் பதவி பெயா் மாற்றத்தை ஏற்கக் கூடாது என சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த 18.10.2026 அன்று மதுரையில் கூடிய மாநில அவசர செயற்குழு கூட்ட முடிவின்படி, முதல் கட்டமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வழியாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு இந்தக் கோரிக்கையைக் கொண்டு செல்வதென தீா்மானிக்கப்பட்டது. இதன்படி, சங்கத்தின் மாநில துணைத் தலைவா்கள் ஆா். புவனேஸ்வரி, ஆா். சாந்தி, மாவட்டத் தலைவா் பஞ்சவா்ணம், செயலா் கன்சல்மகரிபாபேகம், பொருளாளா் பி. முத்து மீனாட்சி உள்ளிட்ட நிா்வாகிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை இதுதொடா்பான மனுவை அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

