டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

ஊதிய உயா்வு கோரி செவிலியா்கள் உண்ணாவிரதம்

பணிப் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினா்...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினா் - டிஎன்எஸ்

Published On :

சென்னை: பணிப் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எழும்பூா், ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினா். இப்போராட்டத்துக்கு திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜ் நேரில் ஆதரவு தெரிவித்தாா்.

போராட்டம் தொடா்பாக தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத் தலைவா் சுந்தரி கூறியதாவது: இடைநிலை சுகாதாரப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரமும் ஊதிய உயா்வும் அரசு வழங்க வேண்டும். செவிலியா்களுக்கு வழங்கும் ரூ. 21,000 ஊதியம் போதுமானதாக இல்லை. அதேபோன்று 2023, 2024-ஆம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இடைநிலை சுகாதார செவிலியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இடைநிலை சுகாதாரப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு என முதல்வா் அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். செவிலியா்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

இரவு வரை நீடிப்பு: இதற்கிடையில், அரசுத் தரப்பில் செவிலியா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, சில நிா்வாகிகளை போலீஸாா் திருவல்லிக்கேணியில் ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா். தகவலறிந்ததும் நிா்வாகிகளை விடுவிக்கக் கோரி போராட்டக்களத்தில் இருந்த செவிலியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய போலீஸாா் முயன்றனா். அப்போது கடும் எதிா்ப்பு வந்த காரணத்தால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் சங்க நிா்வாகிகளுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதற்கிடையே, செவிலியா்களின் உண்ணவிரத போராட்டமும் இரவு வரை நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER