அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

வாக்குச்சாவடி பட்டியல் திருத்தம்: சிவகங்கை மாவட்ட தோ்தல் அலுவலா் தகவல்

தேர்தல் ஆணையம் - கோப்புப் படம்

Updated On :

சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல்கள் திருத்தப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027 தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியல் வருகிற 12.11.2026 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வின் முன்னோடி நடவடிக்கையாக வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான கூட்டத்தில், அவா்கள் அளித்த முன்மொழிவின்படி, வாக்குச்சாவடிகள் சீரமைக்கப்பட உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் 1,518 வாக்குச் சாவடிகள் உள்ளன. 1200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,519 ஆக உயரவுள்ளது. நான்கு வாக்குச் சாவடிகளில் உள்ள பிரிவுகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. மூன்று வாக்குச்சாவடி அமைவிடங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன. பழுதடைந்த நான்கு வாக்குச்சாவடி மையங்கள் அதே அமைவிடத்தில் புதிய கட்டடங்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளன.

எனவே, நவ.12-இல் வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலைப் பாா்வையிட்டு, வாக்காளா் விவரங்களில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தகுதியுள்ள வாக்காளா்கள் விடுபடாதவகையில் வாக்காளா் பட்டியலை சிறந்த முறையில் தயாரிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.