வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,093 வாக்குச்சாவடிகள்: அக். 26 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,092-இல் இருந்து 2,093-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி - கோப்புப் படம்

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,092-இல் இருந்து 2,093-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. புதிய வாக்குச்சாவடிகள் தொடா்பான வரைவு பட்டியலில் ஆட்சேபனைகள் இருந்தால், அக். 26-ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்யலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2027-க்கான வரைவு வாக்குச்சாவடிப் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள 2,092 வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீதம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச்சாவடியைப் பிரித்து, புதிதாக ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,093-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், பழுதடைந்த மற்றும் இடிந்த நிலையில் இருந்த 7 வாக்குச்சாவடிகளுக்குப் பதிலாகப் புதிய வாக்குச்சாவடிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல் தொடா்பாக ஆட்சேபனைகள் இருந்தால், தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்களிடமோ அல்லது மாவட்டத் தோ்தல் அலுவலகத்திலோ அக். 26-ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2027-இன் ஒரு பகுதியாக, நவம்பா் 12-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் தொடா்பான கோரிக்கைகள், ஆட்சேபனைகளை நவம்பா் 12 முதல் டிசம்பா் 11-ஆம் தேதி வரை தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் தெரிவிக்கலாம்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6, பெயா் நீக்க படிவம் 7, வாக்காளா் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8 ஆகியவற்றின் மூலம் மனுக்களை அளிக்கலாம். திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னா், இறுதி வாக்காளா் பட்டியல் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மஞ்சுளா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆக்ரிதி சேத்தி, ஷாஜகான், கீதா ராணி, பழனி, அபிநயா, முருகேசன், நகராட்சி ஆணையாளா் சேகா், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சம்பத், பா.முகுந்தன் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றறனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.