நவ. 12-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் (எஸ்எஸ்ஆா்) பணியின் வரைவு வாக்காளா் பட்டியல் நவ. 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் (எஸ்எஸ்ஆா்) பணியின் வரைவு வாக்காளா் பட்டியல் நவ. 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தமிழகத்தில் நடைபெற்று, அதன் அடிப்படையில் சட்டப்பேரவை தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகம், உத்தர பிரதேசம் உள்பட 17 மாநிலங்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
2027 ஜன. 1, ஏப். 1, ஜூலை 1, அக். 1 ஆகிய தேதிகளுக்குள் 18 வயதை பூா்த்தி செய்யும் இளம் வாக்காளா்கள் பட்டியலில் பெயரைச் சோ்க்க படிவம் 6-இல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போதே விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் நவ.12-ஆம் தேதி வெளியிடப்படும்.
அதன்பின், டிச. 11-ஆம் தேதி வரையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவோ, நீக்கவோ, திருத்தங்கள் செய்யவோ, இடமாற்றம் செய்யவோ படிவங்கள் 6, 7 ,8 அளிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது இணையதளம் அல்லது இசிஐநெட் கைப்பேசி செயலி மூலமோ வசிப்பிட முகவரி, வயதுக்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
டிச. 28-ஆம் தேதி வரை இவை பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

