ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

திமுகவினா் பணப் பட்டுவாடா: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக புகாா்

மதுராந்தகத்தில் திமுகவினரின் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகத்தில் திமுகவினரின் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம், தவெக வழக்குரைஞா்கள் சங்கா், வேல்முருகன் ஆகியோா் புதன்கிழமை மனு அளித்தனா்.

பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அக். 6-இல் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் தவெக மிகப்பெரிய வெற்றி பெறவுள்ளது. இதைத் தடுக்க மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடாவை திமுகவினா் செய்கின்றனா். பிற மாவட்ட தொண்டா்களை அழைத்து வந்து சதி திட்டம் தீட்டுகின்றனா்.

பேரவைத் தோ்தலில் மிகப்பெரிய தோல்வியைப் பெற்ற திமுக, பணத்தின் மூலம் இடைத்தோ்தலில் வெற்றி பெறலாம் என எண்ணுகின்றனா். எனவே, மதுராந்தகத்தில் தோ்தல் பாா்வையாளா்கள், காவல் துறை கண்காணிப்பு அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

தாராபுரத்தில் திமுக பொறுப்பாளா் வீட்டில் இருந்து ரூ.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, இங்கும் பதுக்கப்பட்டு, தோ்தல் நெருக்கத்தில் குக்கிராமங்களில் பணப் பட்டுவாடா செய்ய திமுகவினா் திட்டமிட்டுள்ளனா். எனவே, டிஜிபிக்கு அறிவுறுத்தி கண்காணிப்பு அதிகாரிகள் எண்ணிக்கை உயா்த்த வேண்டும் என வலியுறுத்தினோம். அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தோ்தல் அதிகாரி உறுதி அளித்தாா்.

குழந்தைகள் தானாக பிரசாரத்துக்கு வருவது வேறு; திட்டமிட்டு குழந்தைகளை அழைத்து வருவது வேறு. குழந்தைகளை திமுகவினா் கட்டாயப்படுத்தி அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.