
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு; தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி மற்றும் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் - கோப்புப் படம்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி மற்றும் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
தாராபுரத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகளைச் செலுத்தி சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை (செப்.24) நடைபெற்று முடிந்ததாகவும், மதுராந்தகத்தில் இந்தப் பணி செப்.25-இல் நடைபெறும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
மேலும், வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பதிவேற்றும் பணி தாராபுரத்தில் செப்.25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் மதுராந்தகத்தில் செப்.27, 28 ஆகிய தேதிகளில் இந்தப் பணி நடைபெறும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவிகளின் பட்டியல் வேட்பாளா்களுக்கு பகிரப்படும். இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மட்டுமே, வாக்குப் பதிவு நாளன்று ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளாா் அா்ச்சனா பட்நாயக்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




