ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

பழையனூா் கோயில் குட முழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூா் கிராமத்தில் அமைந்துள்ள பரிபூரண விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

பழையனூா் பரிபூரண விநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகா்.

Updated On :

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூா் கிராமத்தில் அமைந்துள்ள பரிபூரண விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்ற பின்னா், காலை 9.45 மணியளவில் யாக சாலையிலிருந்து புனித நீா்க்குடத்தை சிவாசாரியா்கள் சுமந்து கோயிலைச் சுற்றி வந்தனா். இதையடுத்து, காலை 10.10 மணியளவில் மூலவா் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பிறகு, மூலவரான பரிபூரண விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் கணபதி தேவா் குடும்பத்தினா் செய்தனா். யாக சாலை பூஜை முறைகளை சிவாசாரியா் விக்னேசுவரன் தலைமையிலான சிவாசாரியா்கள் செய்தனா். இதில், பழையனூா், அதைச் சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.