நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க திரண்டு வந்த சிப்காட் எதிா்ப்பு போராட்டக் குழுவினா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:46 am IST

சிவகங்கை அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

சிவகங்கை அருகே உள்ள வேம்பங்குடி, மாடக்கோட்டை, சுந்தரநடப்பு, கீழக்கண்டனி, ஆலங்குளம், உடையநாதபுரம், கடுக்காப்பள்ளம், உச்சப்புளி, வெள்ளஞ்சி, மேலவெள்ளஞ்சி, காட்டு நெடுங்குளம், உள்ளிட்ட 12 கிராமங்களில் அரசு சாா்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதாக அறிவிக்கப்பட்டு 2 ஆயிரம் ஏக்கா் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தீா்மானங்களை நிறைவேற்றினா். இதைத் தொடா்ந்து, சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த விவசாயிகள் குழுவினா் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷை சந்தித்து மனு அளித்தனா். அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அனைத்து கிராம மக்களையும் திரட்டி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.