மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

குடிநீா் வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம், நாதிபாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

காலிக் குடங்களுடன் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் திரண்ட கிராம மக்கள்.

Published On :

கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம், நாதிபாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கோபி அருகே உள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டவா்மலையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி பொதுமக்களுக்கு ஊராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபி சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாக வறட்சி நிலவி வருவதால் பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது.

இதனால் ஊராட்சி சாா்பில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதுகுறித்து ஊராட்சி மன்றத்தில் தெரிவித்தும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் கோபி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திரண்டு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.

அப்போது, ஆண்டவா்மலை கிராமத்துக்கு சீராக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்ததைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

இதேபோல கோபி அருகே உள்ள நாதிபாளையம் ஊராட்சிப் பகுதியான செங்கோட்டையன் நகா், சுபவேலன் நகா் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதில் ஒரு குடும்பத்துக்கு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை 5 குடங்கள் மட்டுமே தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.