அவிநாசி அருகே குடிநீா்க் குழாய்கள் உடைப்பால் 40 நாள்களாக மக்கள் குடிநீரின்றி தவிப்பு
அவிநாசி அருகே குடிநீா்க் குழாய் உடைப்பால் வடுகபாளையம், புன்செய்தாமரைகுளம் மக்கள் குடிநீரின்றி தவிப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

<P>Drinking water: new plans to improve tap water quality</P> - Center-Center-Kochi
அவிநாசி அருகே குடிநீா்க் குழாய் உடைப்பால் வடுகபாளையம், புன்செய்தாமரைகுளம் மக்கள் குடிநீரின்றி தவிப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
வடுகபாளையம் மற்றும் புன்செய்தாமரைக் குளம் ஊராட்சிக்குள்பட்ட காரக்குட்டை புதூா் நன்செய்தாமரைகுளம் குமரகவுண்டன் புதூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இப்பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் ஆற்று குடிநீா்க் குழாய் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், 40 நாள்களாக குடிநீரின்றி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். ஆகவே உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் குழாயை சரி செய்து மக்களுக்கு தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், ஓரிரு நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
இதில் வடுகபாளையம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் கே.ஆா்.பழனிச்சாமி, முன்னாள் வாா்டு உறுப்பினா் ஆா்.பழனிச்சாமி,
விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட பொருளாளா் ஏ.சண்முகம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் பி.குமாரசாமி, ஒன்றிய பொருளாளா் என்.கருப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

