நிலுவை ஊதியத்தை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளா்கள்
நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் வட்டார வளா்ச்சி அலுவலா் சலீம்.
நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சியில் நூறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூடலூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக்தை முற்றுகையிட்டனா்.
இதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் சலீம், தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஊதிய நிலுவைக்கான கால தாமதம் குறித்த காரணங்களை தெளிவுபடுத்தினாா். மேலும், ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தாா். இதையடுத்து, தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

