போஸ்பாறா பகுதியில் வன அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா பகுதியில் யானைகளை வனத்துக்குள் விரட்ட வலியுறுத்தி வன அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

வன அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

Updated On :

கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா பகுதியில் யானைகளை வனத்துக்குள் விரட்ட வலியுறுத்தி வன அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள செம்பக்கொல்லி, மச்சிக்கொல்லி, போஸ்பாறா ஆகிய பகுதிகளில் தினமும் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து உடைமைகளை சேதப்படுத்தி வருகின்றன.

பொதுமக்கள் தரப்பில் பலமுறை வனத் துறையிடம் கோரிக்கை விடுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போஸ்பாறா பகுதியிலுள்ள வன அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த கூடலூர காவல் ஆய்வாளா் பவுலோஸ், வனவா் வீரமணி ஆகியோா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். யானைகள் நுழையும் பகுதியிலுள்ள அகழிகளை ஆழப்படுத்தவும், புதிய இடங்களில அகழிகள் வெட்டி யானைகள் ஊருக்குள் நுழையாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.