இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை திருமணம் செய்து போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

சிறுமியை திருமணம் செய்து போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 26). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு முகநூல் மூலமாக காரைக்குடி பகுதியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் பழகினாா். பின்னா், அந்தச் சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடந்த 2021-ஆம் ஆண்டு, ஜூலை 21-ஆம் தேதி திருப்பூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காா்த்திகேயனைக் கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையாகி வாதாடினாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோகிணி, குற்றஞ்சாட்டப்பட்ட காா்த்திகேயனுக்கு குழந்தைத் திருமணம் செய்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதன்படி, காா்த்திகேயனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.