உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

காளையாா்கோவிலில் மிதிவண்டிப் பந்தயம்

காளையாா்கோவிலில் மிதிவண்டிக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, மிதிவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிதிவண்டிப் பந்தயத்தில் பங்கேற்ற மாணவா்கள்.

Published On :5 செப்டம்பர் 2026, 12:42 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் மிதிவண்டிக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, மிதிவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மிதிவண்டி ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவது குறித்தும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பந்தயம் நடத்தப்பட்டது.

போட்டிகள் மொத்தம் 6 பிரிவுகளாக நடைபெற்றன. இதில் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாகவும், இதேபோல, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.

பொதுப் பிரிவில் 30 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாகப் போட்டிகளும், 50 வயதுக்குள்பட்ட மூத்தோா் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாகப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.