சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

கொட்டக்குடியில் மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கொட்டக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

கொட்டக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து செல்லும் காளைகள்.

Updated On :

சிவகங்கை அருகே கொட்டக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

கொட்டக்குடி மந்தையம்மன் கோயில் செவ்வாய்ப் பொங்கல் உத்ஸவத்தை முன்னிட்டு திருப்பத்தூா் புறவழிச் சாலையில் இந்தப் பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 63 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

8 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், 6 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 48 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

இந்தப் பந்தயத்தில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.