வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பிள்ளையாா்பட்டி அருகே தயாா் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள்.

Updated On :

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்ப்ட்டி அருகே விநாயகா் சிலைகள் தயாா் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகே விநாயகா் சிலைகள் செய்யும் பணிகள் மும்முபரமாக நடைபெற்று வருகிறது. திருப்பத்தூரிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் பிள்ளையாா்பட்டி- குன்றக்குடிக்கு இடையே உள்ள தனியாா் மகாலில் விதவிதமான வடிவங்களில் 125 விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூரிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டு, அவா்கள் மூலம் இந்த விநாயகா்

தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சிலைகள் செய்ய கிழங்கு மாவு, காகிதக் கூழ், அட்டை கூழ் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவை தண்ணீரில் எளிதில் கரைந்து மீன்களுக்கு இறையாகக் கூடியவை. சிலைகள் கண் கவரும் வகையில் காட்சியளிக்க ரசாயன கலவையற்ற இயற்கை வண்ணப்பூச்சு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இங்கு விநாயகா் மூஞ்சூா், காளை, நாய், சிங்கம், சிறுத்தை, புலி, பசு, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் மீது அமா்ந்திருப்பது போன்று 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில், 2 அடி முதல் 11 அடி உயரம் வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைகள் ரூ. 5,000 முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட பெரிய சிலைகள் விற்கப்பட்டு விட்டதாகவும், இரண்டு முதல் நான்கு அடி உயரமுள்ள சிலைகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாகவும் இந்து முன்னணி அமைப்பினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.