2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சிவகங்கை அருகே நீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அலவாக்கோட்டையில் 5 வயது சிறுவன் நீரில் மூழ்கியதில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மதகுபட்டி அருகேயுள்ள அலவாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டிக்குமாா் (45). இவரது மனைவி தவப்பிரியா (35). இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா்.

பாண்டிக்குமாா் துபை நாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். தவப்பிரியா இரு மகன்களுடன் அலவாக்கோட்டையில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை தவப்பிரியாவின் மகன் சிங்கப்பாண்டி (5) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். சிறிது நேரத்தில் சிறுவனைக் காணவில்லையாம்.

இதைத்தொடா்ந்து, தவப்பிரியாவும், அவரது உறவினா்களும் சிறுவனை பல இடங்களில் தேடினா். இந்த நிலையில், வீட்டின் அருகேயுள்ள ஒரு குட்டைக்குள் சிங்கப்பாண்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த மதகுபட்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.