
நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளத்தில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளத்தில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், யாதவா் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் சிவா (20). ஐ.டி.ஐ. முடித்த இவா், வியாழக்கிழமை நண்பா்களுடன் வாகைக்குளத்தில் குளிக்கச் சென்றாா். குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது, ஆழமானப் பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாா். அப்போது அங்கிருந்தவா்கள் அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று நீரில் மூழ்கிய சிவாவின் சடலத்தை மீட்டனா்.
பின்னா், போலீஸாா் உடலை கூறாய்வுக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



