ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை தொடக்கம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் புதிதாக நிறுவப்பட்ட செவித்திறன் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்ட செவித்திறன் பரிசோதனைக் கருவியில் நோயாளியை சோதித்த மருத்துவா்கள்.

Published On :

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் புதிதாக நிறுவப்பட்ட செவித்திறன் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் எஸ். கலைவாணி பங்கேற்று பரிசோதனையைத் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது: இந்த ‘இம்பிடன்ஸ் ஆடியோமீட்டா்’ கருவி காதின் செயல்பாட்டை துல்லியமாக அளவிட முடியும்.

இதன் மூலம் செவிப்பறையின் நெகிழ்வுத்தன்மை, நடுக்காதின் அழுத்தம், காதில் நீா் தேங்குதல் உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும். ரூ.3.15 லட்சம் மதிப்பிலான இந்தக் கருவி, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டது.

இதன் மூலம் நாள்தோறும் 15 நோயாளிகளை பரிசோதனை செய்ய முடியும் என்றாா் அவா்.

இதில், துறைத் தலைவா் சிவசுப்பிரமணியன், மருத்துவக் கண்காணிப்பாளா் தமிழ்வாணன், துணை முதல்வா் விசாலாட்சி, நிலைய மருத்துவ அலுவலா் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவ அலுவலா்கள் தென்றல், வெங்கடேசன், காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பு அலுவலா் கணேச பாண்டியன், செவித்திறன் பரிசோதகா் கவிதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.