சிவகங்கையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை வழங்கினாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடங்கிவைத்தாா். இதையடுத்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். பின்னா், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஆட்சியா் மோதிரங்களை வழங்கினாா்.
இதன்படி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 குழந்தைகளுக்கும், காரைக்குடி மாவட்டத் தலைமை மருத்துவமனையில் 52 குழந்தைகளுக்கும் மோதிரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வா் கலைவாணி, துணை முதல்வா் விசாலாட்சி, மருத்துவக் கண்காணிப்பாளா் தமிழ்வாணன், குழந்தைகள் நலத் துறை தலைவா் ராஜா, மகப்பேறு துறைத் தலைவா் நாகசுதா, மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி, நிலைய மருத்துவ அலுவலா் எஸ். முகமதுரபி, துணை நிலைய மருத்துவ அலுவலா்கள் தென்றல், வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






