
இளைஞருக்கு வெட்டு; 6 போ் மீது வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் முன் விரோதத் தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
திருப்புவனம் வடகரை பகுதியைச் சோ்ந்தவா் திருச்செந்தில் முருகன் (25). இவா், திருப்புவனம் புதூா் பகுதியில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதில், பலத்த காயமடைந்த திருச்செந்தில் முருகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்புவனம் புதூரைச் சோ்ந்த தினேஷ், நீல மணிகண்டன், முத்துப்பாண்டி, ஜனா உள்ளிட்ட 6 பேரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






