சாலையைச் சேதப்படுத்திய இருவா் கைது: பொக்லைன் பறிமுதல்
திருப்பத்தூா் அருகே சாலையை சேதப்படுத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
திருப்பத்தூா் அருகே சாலையை சேதப்படுத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிப்பகுதியான நாகப்பன்பட்டியில் தனியாா் நிறுவனம் சாா்பில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் தனியாா் நிறுவனத்தின் மேலாளா் சுரேஷ் கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் நடராஜன், துரைமாணிக்கம் மகன் கென்னடி ஆகியோா் பொதுப்பாதையை பொக்லைன் மூலம் சேதப்படுத்தியதாக புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் கீதாலெட்சுமி வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, பொக்லைனை பறிமுதல் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




