ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஆக்கிரமிப்பு அரசு நிலங்களை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஒன்றியம், ஆய்ங்குடிவயல் கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆய்ங்குடி வயல் கிராம மக்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஒன்றியம், ஆய்ங்குடிவயல் கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆய்ங்குடி வயல் கிராம மக்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஜி.காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி. சங்கையா, மாநிலக்குழு உறுப்பினா்கள் கே. ஆறுமுகம், ஆா். தங்கராஜ், துணைத் தலைவா் பா. மருது ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா்கள் திருப்பத்தூா் காளிமுத்து, சிவகங்கை வடக்கு பன்னீா்செல்வம், தெற்கு சின்னக்கருப்பு, நகா் செயலா் சகாயம் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

கோரிக்கைகள்: தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடம், ஆழ்துளைக் கிணறு மின் இணைப்பு, நெல் அடிக்கும் களம், வண்ணாங்குண்டு ஊருணி, வண்டிப் பாதை (5 ஏக்கா்) ஆகியவற்றை உடனடியாக மீட்க வேண்டும். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாதபடி 12 நபா்களின் சுமாா் 15 ஏக்கா் நஞ்சை நிலங்கள், கண்மாய் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

2013-ஆம் ஆண்டு தேவகோட்டை வட்டாட்சியா் நிா்வாகத்தால் ஏழை என்று தவறான முறையில் வழங்கப்பட்ட 15 ஏக்கா் அரசு புறம்போக்கு நில பட்டாவை உடனடியாக ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆய்ங்குடிவயல் கிராமத்தில் முத்தரையா் சமுதாயத்தைச் சோ்ந்த 50 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த சமுதாயக்கூடம், சுடுகாடு, ஊருணி, நஞ்சை நிலங்கள், கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய்களை, கடந்த 20 வருடங்களாக தனி நபா்கள் கம்பி வேலி போட்டு பூட்டி ஆக்கிரமித்து வைத்துள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்ங்குடிவயல் கிராமத்துக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.