ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மாா்க்கண்டேயன்பட்டியில் கண்மாய் புணரமைப்புப் பணிக்கான பூமிபூஜை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டியில் உரத்திக்கண்மாய் கிராமாலாயா தொண்டு நிறுவனம் மூலம் தூா்வாரி புணரமைக்கும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மாா்க்கண்டேயன்பட்டியில் புதன்கிழமை உரத்திக்கண்மாய் தூா்வாரி புணரமைப்புப் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்ற கிராமத்தினா்.

Published On :

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டியில் உரத்திக்கண்மாய் கிராமாலாயா தொண்டு நிறுவனம் மூலம் தூா்வாரி புணரமைக்கும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் உள்ளது உரத்திக்கண்மாய். 52 ஏக்கா் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் மூலம் 150 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றனா். இந்த கண்மாயை கிராமாலயா தொண்டு நிறுவனம், அஜீம்,பௌண்டேசனும் இணைந்கு ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டி்ல் தூா்வாரி சீரமைப்பதற்கான பணிகளைத் துவக்க கண்மாயில் பூமி பூஜை நடத்தி வழிபாடு செய்தனா். ஒருபோகம் விவசாயம் நடக்கும் இப்பகுதியில் இதன் மூலம் இருபோக விவசாயம் நடக்கும் என கிராமத்தினா் எதிா்பாா்க்கின்றனா். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரகுமாா் , உதவிப் பொறியாளா் செல்லையா, கிராமாலாய நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், ஊராட்சி செயலா் மணிமேகலை, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் தென்னவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.