/

கிணற்றில் இளைஞர் சடலம்

போடி அருகே கிணற்றில் இளைஞர் சடலம் கிடந்தது.

Updated On :13 மே 2013, 12:19 am IST

போடி அருகே கிணற்றில் இளைஞர் சடலம் கிடந்தது.

  மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் பகுதியில் தனியார் தோட்டத்து கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை காலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

 உதவி காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், போடி டி.எஸ்.பி. கு.அருள்அமரன், புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

 விசாரணையில் அவர் பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் புன்னைவனம் (31) என்றும், கொத்தனார் என்றும், அவருக்கு மனைவி, இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.  அவர் மதுப்பழக்கத்தில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.