போடி அருகே கிணற்றில் இளைஞர் சடலம் கிடந்தது.
மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் பகுதியில் தனியார் தோட்டத்து கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை காலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
உதவி காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், போடி டி.எஸ்.பி. கு.அருள்அமரன், புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
விசாரணையில் அவர் பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் புன்னைவனம் (31) என்றும், கொத்தனார் என்றும், அவருக்கு மனைவி, இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அவர் மதுப்பழக்கத்தில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


