தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் கவனத்துக்கு...

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் முகவரி மாற்றம் குறித்து சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் முகவரி மாற்றம் குறித்து சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

   இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், முதிர்கன்னிகள் உதவித் தொகை ஆகிய பயன்களை பெற்று வரும் பயனாளிகள், தற்போது முகவரி மாறி குடியிருந்தால், ஏற்கெனவே வசித்து வந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஆகியோரிடம் விண்ணப்பித்து, முகவரி மாற்றத்துக்கு சான்றிதழ் பெறவேண்டும்.

  இந்தச் சான்றிதழுடன், புதிதாக தொடங்கிய வங்கிக் கணக்கு எண்ணையும் இணைத்து, தற்போது குடியிருக்கும் பகுதிக்கான சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியரிடம் சமர்ப்பித்து, தொடர்ந்து ஓய்வூதியம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.