பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

மண்டல அளவிலான கபடிப் போட்டிகள்: காரியாபட்டி ராமுசீதா பாலிடெக்னிக் முதலிடம்

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்றன.

Published On :

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்றன.

   மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. காலிறுதி, அரையிறுதி என பல்வேறு சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

  இறுதிப் போட்டியில், காரியாபட்டி ராமு சீதா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 25-15 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தையும், திருப்பத்தூர் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மதுரை ஜிஎம்எஸ் பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தேனி மாவட்ட உடற்கல்வி அலுவலர் சுப்புராஜ் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

  இந்நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆய்வாளர் எம். இளங்கோ, கல்லூரி முதல்வர் லட்சுமிநரசிம்மன், துணை முதல்வர் பி.வி. அருள்குமார், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காசுமாயன், துணை முதல்வர் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, கல்லூரி உடற்கல்வி இயக்குநர்கள் சிவா, கதிரேசன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.