பெரியகுளம் அருகே புதன்கிழமை தோட்டத்துக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன் (41). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து உறவினர்கள் அஹவரை தேடிய போது தோட்டத்தில் உள்ள வாய்க்காலில் அவர் மயங்கி விழுந்து இறந்து கிடந்தாராம். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.