வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தேனியில் அக்.15-இல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டுப் போட்டி

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அக்.15-ஆம் தேதி காலை 8 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ,

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:22 am

DIN

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அக்.15-ஆம் தேதி காலை 8 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தடகளம், நீச்சல் மற்றும் கூடைப்பந்து, இறகுப் பந்து, கபடி, கோ-கோ, கையுந்து பந்து ஆகிய குழு விளையாட்டுப் போட்டிகளில் மாவட்டத்துக்குள்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்கிறார். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி அணிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடம்  சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.