பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
தேவதானப்பட்டி, தெற்குத் தெருவைச் சேர்ந்த ராமன் மகன் முத்துக்கிருஷ்ணன் (50). இவர், தேவதானப்பட்டி கருப்பசாமி கோயில் அருகே உள்ள அருணா சேகர் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் காமாட்சி மகன் ராசு (எ) சுப்பையா (57). இவர், அதே பகுதியில் செந்தில் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், மஞ்சளாறு வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை முறை வைத்து வயலுக்குப் பாய்ச்சுவதில் முத்துக்கிருஷ்ணன், ராசு ஆகியோரிடையே தகாராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறில் கடந்த 2013, நவ.18 ஆம் தேதி முத்துக்கிருஷ்ணனை, ராசு மண் வெட்டியால் தாக்கி கொலை செய்தாராம். 
இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, அதே ஆண்டு நவ.20 ஆம் தேதி ராசுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 
இந்நிலையில் இந்த வழக்கில் முத்துக்கிருஷ்ணை கொலை செய்ததற்காக ராசுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.7,000 அபராதம் விதித்து நீதிபதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.