எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் வேன் மோதி சாவு: ஓட்டுநர் கைது

தேனியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் சேலை சக்கரத்தில்

Updated On :25 டிசம்பர் 2018, 7:25 am IST

தேனியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதால், அவர் தடுமாறி கீழே  விழுந்ததில் பின்னால் வந்த வேன் மோதி உயிரிழந்தார்.
வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (58). இவரது மனைவி ஈஸ்வரி (50). இவர்கள் தங்களது பேரக் குழந்தைகள் இருவருடன், அன்னஞ்சி விலக்கு அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றுவிட்டு, தேனி நோக்கி வந்துள்ளனர். அப்போது, பெரியகுளம் சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனைஅருகே இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சேலை சிக்கியதால், ஈஸ்வரி நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். 
அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த வேன் ஈஸ்வரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் கம்பத்தைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.