எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கம்பம் பகுதியில் எள்ளுக்கு அதிக விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் வட்டாரத்தில் எள் விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், போதிய விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :9 ஜூலை 2018, 2:19 am

DIN

கம்பம் வட்டாரத்தில் எள் விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், போதிய விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
       தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு, கம்பு, சோளம், மொச்சை உள்ளிட்ட தானிய வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. 
நடப்பு சீசனில் எள் பயிரிடப்பட்டிருந்தது. 90 முதல் 100 நாள் பயிரான எள், தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. 
   மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட எள் நல்ல விளைச்சலாகவும், அதிக எண்ணெய் சத்தும் கொண்டதாக இருப்பதால், சந்தையில் கிலோ ரூ. 100 வரை விற்பனையாகிறது.
    அதே நேரம், கூடலூர் வெட்டுக்காடு முதல் அனுமந்தன்பட்டி வரை நெல் வயல்களில் படியிரிடப்பட்டிருந்த எள் செடிகள் சுமாரான மகசூலையே தந்துள்ளது. மேலும், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விவசாயிகள் விரைவாக அறுவடையை தொடங்கினர். இதனால் எதிர்பார்த்த அளவு விலையும் கிடைக்கவில்லை.
    மானாவாரி நிலங்களில் எள் பயிரிட்ட விவசாயிகள் காத்திருந்து, தகுந்த பருவத்தில் அறுவடை செய்ததால், நல்ல விலை கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.