வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

க.விலக்கு குடிநீர்த் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரிக்கை

தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் பல மாதங்களாக பயன்பாடின்றி இருக்கும் குடிநீர் மேல்நிலைத்தொட்டியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On :9 ஜூலை 2018, 7:30 pm

தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் பல மாதங்களாக பயன்பாடின்றி இருக்கும் குடிநீர் மேல்நிலைத்தொட்டியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
     தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். க.விலக்கு பகுதியின் ஒரு பகுதி கோவில்பட்டி ஊராட்சியிலும், மற்றொரு பகுதி திருமலாபுரம் ஊராட்சியிலும் இணைந்துள்ளன.
  க.விலக்கு பகுதிக்கு குன்னூர் அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின்மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக க.விலக்கு பகுதியில் திருமலாபுரம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சிகளின் சார்பில் தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கோவில்பட்டி ஊராட்சியின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி பல மாதங்களாக பயன்பாடு இன்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
 இத்தொட்டியின் அருகே கட்டப்பட்டுள்ள மின் மோட்டார் அறை பாதுகாப்பின்றி திறந்தே கிடப்பதாகவும் பல மாதங்களாக மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி விநியோகம் செய்யப்படாததால்  அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.  மேலும் கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மக்கள் தண்ணீருக்காக திருமலாபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே க.விலக்கு பகுதியில் கோவில்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.