சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் திருட்டு வழக்கில் கைதான இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை, மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.
எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் ராஜேஷ் கண்ணன் (26). இவரை, ஓடைப்பட்டியில் வீடு புகுந்து பொருள்களை திருடியதாக கடந்த மார்ச் 3-ஆம் தேதி ஓடைப்பட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 9 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ராஜேஷ் கண்ணனை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவுக்கு, மாவட்ட காவல் காண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராஜேஷ் கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






