தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை, மணல் திருட்டைத் தடுத்து நிறுத்தக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெரும் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் இரா.தமிழ்பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலர் க.பாரதி, மாவட்டத் தலைவர் முத்துமுருகன், பொருளாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் தொடங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாவட்டத்தில் ஆற்று மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

12 இடங்களில் வெய்யில் சதம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

